தாய்மொழி வெறியர்கள் थ्रेड पोस्टर: Narasimhan Raghavan
|
நான் சமீபத்தில் 1975-ல் செய்த முதல் மொழிபெயர்ப்பு வேலையே துபாஷி வேலைதான். மார்ச் மாதம். அப்போது மேக்ஸ் ம்யுல்லர் பவனில் Oberstufe வகுப்பில் படித்து கொண்டிருந்தேன். பிரெஞ்சு இன்னும் கற்கவில்லை. �... See more நான் சமீபத்தில் 1975-ல் செய்த முதல் மொழிபெயர்ப்பு வேலையே துபாஷி வேலைதான். மார்ச் மாதம். அப்போது மேக்ஸ் ம்யுல்லர் பவனில் Oberstufe வகுப்பில் படித்து கொண்டிருந்தேன். பிரெஞ்சு இன்னும் கற்கவில்லை. அந்த ஆண்டு ஜூலை மாதத்தில்தான் அதை ஆரம்பிக்கப் போகிறேன் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. அது வேறு கதை. இப்போது நான் கூறவந்ததைக் கூறிவிடுகிறேன்.
திடீரென Gaitonde என்ற தோல் பதனிடும் கம்பெனிக்கு ஜெர்மன் துபாஷி தேவைப்பட்டது. மேக்ஸ்ம்யுல்லர் பவன் நிர்வாக அதிகாரி துளிக்கூட தயக்கம் காட்டாது என்னை சிபாரிசு செய்து விட்டார். எனக்கு சற்றே உதறல்தான். ஆனால் தேசிகன் என் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கையை பார்த்தபின் நானும் துணிந்து விட்டேன். போனேன், வேலை செய்தேன்.
ஆரம்பத்திலேயே ஜெர்மன் விருந்தாளி என்னிடம் கூறிவிட்டார். அவர் தனது ஆங்கில அறிவை மேம்படுத்துவதில் இருந்ததால் தான் அதிகம் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கப் போவதாகவும் ஆகவே நான் அவருக்கு அவ்வப்போது ஆங்கில வார்த்தைகளை எடுத்து கொடுத்தால் போதும் என்றும் கூறினார். ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிட வேண்டும். பணவிஷயம் பற்றிப் பேசும்போது மட்டும் அந்த எம்டன் மனிதர் ஜெர்மனில்தான் பேசினார்.
நான் பார்த்த ஜெர்மானியர் முடிந்த வரைக்கும் தாங்களே ஆங்கிலம் பேசி என்னைப் போன்ற துபாஷிகளின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டனர். அவர்களை துரோகிகள் என்று நான் பாதி விளையாட்டாகவும் பாதி வினையாகவும் கூறுவதுண்டு. அப்போதிலிருந்து இன்று வரை நான் செய்த ஜெர்மானிய துபாஷி வேலைகள் ஃபிரெஞ்சு துபாஷி வேலைகளுடன் ஒப்பிடும்போது அவ்வளவாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.
பிரெஞ்சுக்காரர்கள்? ஆங்கிலம் தெரிந்தாலும் அதில் பேச விரும்ப மாட்டார்கள். அவ்வளவு தாய்மொழிப் பற்று அவர்களுக்கு. அவர்களைத்தான் எனக்கு பிடிக்கும். என் போன்றவர்களுக்கு வேலை கிடைக்கிறதல்லவா? ஹி ஹி ஹி.
அவர்களது மொழிவெறிக்கு ஒரு உதாரணம் Gerge Pompidou என்பவர். அவர் ஃபிரான்ஸின் குடியரசுத் தலைவராக இருந்தபோது நடந்த விஷயம் இது. அப்போது இங்கிலாந்து ஐரோப்பிய பொதுச் சந்தைக்குள் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தது. எல்லோரும் ஒத்து கொண்ட நிலையில் ஃபிரான்சு மட்டும் முட்டுக்கட்டை போட்டது.
அப்போது Pompidou சொன்னார். "இந்த ஆங்கிலேயர்கள் உள்ளே வந்தால், ஐரோப்பிய சந்தையின் பொது மொழியாக ஆங்கிலம் வந்து விடும். எனக்கு அது பிடிக்கவில்லை" என ஒரு குண்டைப் போட்டார். அச்சமயத்தில் சில ஃபிரெஞ்சுக்காரர்களுக்கே இது கொஞ்சம் ஓவராகப் பட்டது. ஒரு பத்திரிகையில் இவ்வாறு தலைப்பு குடுத்தார்கள். "Monsieur le Président, vous êtes chauviniste!!" (குடியரசுத் தலைவர் அவர்களே, நீங்கள் ஒரு வெறியர்). அதற்காகவெல்லாம் அவர் அசரவில்லை. உண்மையைத்தானே கூறுகிறார்கள் என்று விட்டுவிட்டார் போல.
எது எப்படியானாலும் பிரெஞ்சுக்காரர்களுடன் ஒப்பிடும்போது நாம் இந்த விஷயத்தில் சற்று பின்தங்கித்தான் இருக்கிறோம். எல்லா ஆங்கில வார்த்தைக்கும் தமிழ் பதங்களை காண்பதை பலர் கண்டிக்கிறார்கள். இந்த மனப்பான்மையை நாம் கண்டிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு கப்பல் சம்பந்தப்பட்ட கலைச் சொற்களையே எடுத்து கொள்வோம். பழந்தமிழர்கள் கடற்பயணங்களில் விரும்பி ஈடுபட்டவர்கள். கப்பல்களை கட்டி, கடலில் செலுத்தியவர்கள். நான் கூறுவது சோழர்கள் காலத்தை. கண்டிப்பாக கப்பலின் எல்லா பகுதிகளுக்கும் தமிழ்ப் பெயர் வைத்திருப்பார்கள். அவற்றை கண்டறிந்து இக்காலக் கப்பல்களுக்கு ஏற்ற மாதிரி கொடுக்க முடியாதா? உதாரணம் மாலுமி, மீகாமன், சுக்கான், நங்கூரம் போன்றவை.
அதைத்தான் ஃபிரெஞ்சுக்காரர்களும் செய்கிறார்கள். பல புதிய தொழில்நுட்ப ஆங்கில வார்த்தைகளை முதலில் அப்படியே எடுத்துக் கொள்கிறார்கள். பிறகு அவற்றுக்கேற்ற பிரெஞ்சு வார்த்தைகளை உற்பத்தி செய்கிறார்கள். நம்ம வைகைப்புயல் ஒரு படத்தில் சொன்னது போல இதுக்குன்னே ஒக்காந்து யோசிப்பாங்க போல.
உதாரணத்துக்கு:
Walkman --> Baladeur
Email --> Courriel
Spam --> Pourriel or Polluriel
Hardware --> Matériel
Software --> Logiciel
இந்த மாதிரி ஒக்காந்து யோசிக்கறதுக்குன்னே எனக்கு தெரிந்து இரண்டு அமைப்புகள் உள்ளன. அவை:
Académie Française,
L'enrichissement de la langue française (ELF)
நிஜமாகவே உக்காந்துதான் யோசிக்கிறாங்க. அவ்வப்போது பயங்கர சண்டையெல்லாம் ஏற்படும். அது வேறு கதை. ஆனால் ஒன்று யாராவது சரியான வார்த்தையை உபயோகிக்காவிட்டால் அவர்களுக்கு சங்குதாண்டி. அதே போல பெயர்ப்பலகை வைக்கும்போது ஃபிரெஞ்சில் இல்லையேன்றால் கையில் அகப்பட்டதை வெட்டி விடுவார்கள்.
திடீரென ஏன் இப்பதிவைப் போட்டேன்? காரணம் இருக்கிறது. நான் இப்போது மொழிபெயர்த்து கொண்டிருக்ப்பது ஒரு ஃபிரெஞ்சு கட்டுரை. அது பிளாஸ்டிக் பொருட்கள் பற்றியது. அதில் திடீரென Plasturgiste என்ற வார்த்தை வந்தது. பார்த்த உடனேயே புரிந்து விட்டது. மெடல்லர்ஜி நிபுணர்களை நாம் மெடல்லர்ஜிஸ்டுகள் என்று கூறுவது போல இங்கு பிளாஸ்டிக் தொழில் நுட்பம் தெரிந்தவர்களை பிரெஞ்சில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள். இதில் என்ன விசேஷம் என்றால் உலோகம் மற்றும் பிளாஸ்டிக் தொழ்யில் நுட்பங்களுக்கிடையே பல வார்த்தைகள் பொது. மோல்ட், காஸ்டிங் போன்றவை. இது பற்றி உடனே நான் என் நண்பரும் பிளாஸ்டிக் நிபுணருமான மரபூராருக்கு (ப்ளாஸ்டிக்சந்திரா) ஃபோன் செய்து கேட்டபோது ஆங்கிலத்தில் அவ்வாறு கூறுவதில்லை எனக் கூறிவிட்டார். இருப்பினும் இந்த வார்த்தை என்னைக் கவர்ந்தது. பிளாஸ்டிக் டெக்னாலஜிஸ்ட் என்று கூறுவதை விட இது அழகாகத்தானே உள்ளது?
அன்புடன்,
டோண்டு ராகவன் ▲ Collapse | | |
यस फोरममा विशेष रूपमा कुनै मध्यस्थकर्ता नियुक्त गरिएको छैन।
साइट नियमहरूको उल्लंघनहरूको रिपोर्ट गर्न वा मद्दत पाउनको लागि, कृपया
साइट कर्मचारी » लाई सम्पर्क गर्नुहोस्